இந்த கனவுகள் வந்தால் கடவுள் துணை உங்களுக்கு இருக்கிறதாம்
கனவுகள் என்பது பொதுவாக அனைவருக்கும் வரும். ஆனால், ஒரு சிலர் காணும் கனவுகள் தான் பலிக்கும் எனக் கூறுவார்கள். அதிலும் காலை 4.30 முதல் 5.30 மணி வரையில் வரும் கனவுகள் எச்சரிக்கை எனக் கூறப்படுகிறது.
கடவுள் மீது அதிக பக்தி கொண்டவர்கள் காணும் கனவுகள் நிச்சயம் பலிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதன்படி, கனவில் கோயில் வந்தால், நீங்கள் அந்தக் கோயிலுக்கு சென்று வரவேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கனவில் அம்பு, காளை, மாடு, வேல், மயில், விபூதி, குங்குமம்,வேப்பிலை, எலுமிச்சை ஆகியன வந்தால் கடவுள் அனுக்கிரகம் உங்களுக்கு இருப்பதாக அர்த்தம்.
மயானம், ஆக்ரோஷமான உயிரினங்கள் கனவில் வந்தால் காளியம்மன், வாராகி அம்மன், உக்கிரமான ஆண் தெய்வங்களின் துணை இருப்பதாக அர்த்தம்.
கோயிலிலுள்ள பூ கீழே விழுவது, மணி அடிக்கும் ஓசை போன்றவை கனவில் வந்தால் கடவுள் உங்களிடம் நல்ல விடயங்களைக் கூறுவதாக அர்த்தம்.