ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் – இந்திய அணியின் ஆலோசகராகின்றார் தோனி?
எதிர்வரும் பெப்ரவரி இடம்பெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து சமூக ஊடகங்கள் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒன்பதாவது, ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் அடுத்த மாதம் (பெப்ரவரி) 16ஆம் திகதி முதல் மார்ச் ஒன்பதாம் திகதி வரை பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்த தொடருக்கான அணிகளை வருகிற எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்துள்ளது. மேலும், இந்த வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய பெப்ரவரி 12ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக 2021ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ண தொடரின் போது இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், அந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.