தனி அறையில் பரீட்சை எழுதியதை நிரூபித்தால் பதவி விலகுகிறேன் – நாமல்

தனி அறையில் பரீட்சை எழுதியதை நிரூபித்தால் பதவி விலகுகிறேன் – நாமல்

சட்டப் பரீட்சைக்கு முகங்கொடுத்த விதம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த அவமதிப்பு தன்மை மட்டும் இலக்காகக் கொள்ளவில்லை. முழு சட்ட அமைப்பையும் இலக்கு வைத்து
அவமதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நீதி அமைச்சர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

குளிரூட்டப்பட்ட அறையில் தனியாக பரீட்சை எழுதியநதாக அமைச்சர் கூறும் கருத்து நிரூபிக்கப்பட்டால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவேன் அவ்வாறு இல்லாவிடின் வசந்த சமரசிங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும்” என்றார்.

CATEGORIES
TAGS
Share This