தனிப்பட்ட காரணத்திற்காகவே பதவியை இராஜினாமா செய்தேன் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

தனிப்பட்ட காரணத்திற்காகவே பதவியை இராஜினாமா செய்தேன் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு பொருத்தமான அதிகாரியொருவரை நியமிக்கும் வரையில் தான் குறித்த பதவியின் பொறுப்புக்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இன்று (21) பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்கு முன்னால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தான் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியை இராஜினாமா செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தனிப்பட்ட காரணத்திற்காகவே பதவியை இராஜினாமா செய்வதாகவும் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இதேவேளை, தனிப்பட்ட காரணத்திற்காக இடமாற்றம் ஒன்றை கோரியுள்ளதாகவும் அந்த கோரிக்கை நிறைவேறும் வரையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியை தொடருவதாகவும் புத்திக மனதுங்க கூறினார்.

Share This