தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை “இதயத்தால்” கேட்கின்றேன் – நீதி அமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளார்.
மேலும், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது அமைச்சில் ‘குரலற்றவர்களுக்கான குரல்’ அமைப்பின் பிரதிநிதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்துப் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தங்கள் அன்புக்குரியவர்களின் நீண்டகால தடுப்புக்காவல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு குடும்ப உறுப்பினர்கள் அமைச்சரை வலியுறுத்தினர், அவர்களில் சிலர் 30 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த விடயங்களை தன் காதுகளால் கேட்கவில்லை எனவும் அவர் தன் இதயத்தால் கேட்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.