”அமைச்சில் இருந்த சிம்மாசனத்தை அகற்றிவிட்டேன்” – அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

”அமைச்சில் இருந்த சிம்மாசனத்தை அகற்றிவிட்டேன்” – அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

சிம்மாசனம்  போன்று தனது அமைச்சில் இருந்த கதிரையை அகற்றி பொது மக்கள் என்னுடன் சமமாக அமரக்கூடிய கதிரையை பயன்படுத்துவதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

என்னை சந்திக்க வரும் நபர்கள் தற்போது எனக்கு சமமாக அமர்வார்கள். அதன் மூலம் அரசுப் பணியில் இடம்பெறும் பாகுபாடு களைக்கப்படும்.

அரசு நிறுவனமொன்றுக்குள் நுழையும் குடிமகன் ஒருவர் அது தமது சொந்த நிறுவனம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அரச ஊழியர்களது செயல்பாடுகள் இருக்க வேண்டும். அதற்கு தேவையான மாற்றங்கள் உடனடியாக மேற்கொள்ளப்படும். இங்கு அனைவரும் சமமானவர்கள். எவரும் விசேட உரிமை பெற்றவர்கள் அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Share This