“நான் பொய்யுரைக்கவில்லை” அசோக சபுமல் ரன்வல விளக்கம்

“நான் பொய்யுரைக்கவில்லை” அசோக சபுமல் ரன்வல விளக்கம்

நாட்டு மக்களுக்கு தான் ஒருபோதும் பொய்யுரைக்கவில்லை எனவும் எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு உண்மைய நிரூபிப்பதாகவும் முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தெரிவித்தார்.

‘ஒருவன்’ செய்திப்பிரிவின் சகோதர ஊடகமான ‘மொனரா’ டிஜிட்டல் தளத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதனை மேலும் விளக்கிய அவர்,

“எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சவாலுக்கு உட்படுத்தும் விதத்திலான ஒரு நிலை உருவானது. அதன்காரணமாக, அதற்கு மேலும் நான் அந்த பொறுப்பில் தங்கியிருப்பது என்பது நல்லதல்ல. நான் பதவியிலிருந்து விலகி என் மீது எழுப்பப்பட்ட அவதூறுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய ஒரு தேவை எனக்கு இருந்தது.

ஆகவே, கட்சியுடன் கலந்தாலோசித்து அந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை மேற்கொண்டேன்.” எனத் தெரிவித்தார்.

பதவிகளை பற்றிக் கொண்டு இருக்காமால், அத்தகைய அபாயகரமான ஒரு சூழலில் அவ்வாறான ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share This