
மனைவியின் தாக்குதலுக்கு இலக்கான கணவன் பலி
மிஹிந்தலை, மஹகிரின்னேகம பகுதியில் கூர்மையற்ற ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி தாக்குதல் மேற்கொண்டதில்
அவரது கணவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மிஹிந்தலை, மஹகிரின்னேகம பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான நபர் என தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பில் 53 வயதான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
