திருகோணமலையில் வெளிப்பட்ட மனித எச்சங்கள் – நீதவான் நேரில் கள ஆய்வு

திருகோணமலையில் வெளிப்பட்ட மனித எச்சங்கள் – நீதவான் நேரில் கள ஆய்வு

மூதூர் – சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை இன்று 23ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது.

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் சிறுவர் பூங்காவுக்ககு எதிராக கடற்கரையோர பகுதியில் MAG எனப்படுகின்ற மிதிவெடி அகழும் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை (18) மிதிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில் குறித்த பகுதியில் கடந்த 20ஆம் திக்தி அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிதைவடைந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணி நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக குறித்த பகுதியில் ஆய்வுப்பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று மூதூர் நீதிமன்ற பிரதம நீதிபதி தஸ்நீம் பௌசானா சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியில் பொலிஸார், பூகோள பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பல அரச அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்

குறித்த அகழ்வுப் பணியின்போது சிதைவடைந்த மனித தலைப்பகுதி மற்றும் கால்களின் எலும்புப்பகுதிகளே கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே குறித்த மனித எலும்புப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share This