காத்தான்குடியில் மனித தலை மீட்பு!! முதலை தாக்கியிருக்கலாம் என சந்தேகம்

காத்தான்குடியில் மனித தலை மீட்பு!! முதலை தாக்கியிருக்கலாம் என சந்தேகம்

காத்தான்குடி பகுதியில் உள்ள குளம் ஒன்றில் 66 வயதுடைய ஒருவரின் மனித தலை மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் குளத்தில் குளித்தபோது முதலைகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஏரியில் முதலைகள் அதிகளவில் இருப்பதாக அறியப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக காத்தான்குடி வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This