கடவுச்சீட்டை பெறும் முறை – வெளியானது முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டை பெறும் முறை – வெளியானது முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டு வழங்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 24 மணிநேர சேவையானது ஒரு நாள் சேவைக்காக மட்டுமே செயற்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஒருநாள் சேவைக்காக பதிவு செய்து கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்த முடிவின்படி, 2025 பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் 24 மணிநேரமும் சேவைகளை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வழங்க ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This