
பிரித்தானியாவில் போதைப்பொருள் வர்த்தகம் – நபர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பிரித்தானியாவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாசில்டன் கிரவுன் ( Basildon Crown) நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குறித்த நபர் தென்கிழக்கு இங்கிலாந்து முழுவதும் கொகைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை பாரியளவில் விநியோகித்து வந்ததாக எசெக்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டிலிருந்து பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்த பென் ரான்சம்(Ben Ransome) தாய்லாந்துக்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் அவர் போதைப்பொருள் வலையமைப்பை அங்கிருந்து தொடர்ந்து இயக்கி வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் எசெக்ஸ் பொலிஸார் தாய்லாந்து பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் குறித்த நபரரை கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர் பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பென் ரான்சமுக்கு 29 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வலையமைப்பில் செயற்பட்ட மேலும் பலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
