நம்பிக்கைகள் பொய்த்துப் போயின – கொழும்பு மேயர் கவலை

நம்பிக்கைகள் பொய்த்துப் போயின – கொழும்பு மேயர் கவலை

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த அனைவரும் தேசிய மக்கள் சக்தி வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கவில்லை என கொழும்பு மாநாகர சபையின் மேயர் வ்ராய் கெல்லி பல்தசார் தெரிவித்துள்ளார்.

மாறாக மனசாட்சியின் வரவு செலவுத் திட்டத்தையே தோற்கடித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (22) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு கொழும்பு மாநகர சபையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கெட்டவர்கள் கெட்ட காரியங்களைச் செய்வது இயல்பானது என்றாலும், நல்லவர்கள் கெட்ட காரியங்களைச் செய்ய ஒப்புக்கொள்வது இன்னும் ஆபத்தானது என்று மேயர் வ்ராய் பால்தாசர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ், சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் அன்புடன் கையாண்ட போதிலும், எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்று மேயர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் முதல் வரவு செலவுத் திட்டத்தின் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது, இதில் ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் பதிவாகின.

அதன்படி, தேசிய மக்கள் சக்தி வரவு செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கொழும்பு மாநகர சபைக்கு தேசிய மக்கள் சத்தி 48 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர். எதிர் கட்சிகளை சேர்ந்த 69 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.

இருப்பினும், கொழும்பு மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து போட்டியிட்ட  வ்ராய் கெல்லி பல்தாசர் 61 வாக்குகளைப் பெற்று மேயராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )