முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டி தேனீர்குளவி

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டி தேனீர்குளவி

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்று (30.05.2025) காலை பாடசாலை சென்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களும் தேனீர்குளவி கொட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டிடம் ஒன்றில் தேனீர்குளவி கூடுகட்டி இருந்துள்ளது.

இன்றையதினம் வலயமட்ட விளையாட்டுப்போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்யாலய மைதானத்தில் இடம்பெற இந்நிலையில் திடீரென தேனீர்குளவிகள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி கொட்டியுள்ளது.

இதனால் அச்சமடைந்த மாணவர்கள் அங்கும் இங்குமாக ஒடியுள்ளனர். இப்பாடசாலையின் மாடிக் கட்டிடம் ஒன்றில் பலகாலமாக தேன்பூச்சிகள் கூடுகட்டி வாழ்வதாக கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )