ஹோண்டா இலங்கை நிறுவனம் அவசர மீளப் பெறும் அறிவிப்பை வெளியிட்டது

உயிர்காக்கும் காற்றுப் பைகள் (ஏர்பேக் சிஸ்டம்) மேம்படுத்தல் தொடர்பில் கார்களை மீளப் பெறுவது குறித்த அறிவிப்பை ஹோண்டா இலங்கை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 1996 முதல் 2016 வரையிலான ஹோண்டா வாகன மாடல்களுக்கான SRS உயிர்காக்கும் காற்றுப் பைகள் (ஏர்பேக் சிஸ்டம்) மேம்படுத்தல் திரும்பப் பெறுதல் குறித்து பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு அனைத்து ஹோண்டா வாகன உரிமையாளர்களையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்த மீளப் பெறும் நடவடிக்கை, சில ஹோண்டா மாடல்களில் காற்றுப் பைகள் அமைப்புகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்ப்பதற்கான உலகளாவிய பாதுகாப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும்.
ஏதேனும் வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பதன் முக்கியத்துவத்தை நிறுவனம் வலியுறுத்துகிறது அத்துடன், பழுதடைந்த காற்றுப் பைகளுக்கு இலவச மாற்றீட்டைப் பெற வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கிறது.
“எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் மன அமைதிக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
“விபத்து ஏற்பட்டால் உங்கள் வாகனத்தின் உயிர்காக்கும் காற்றுப் பைகள் (ஏர்பேக் சிஸ்டம்) சரியாகச் செயல்படுவதை உறுதி செய்வது மிகவும் முக்கியம்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் அனைத்து ஆய்வுகளும் மாற்றீடுகளும் இலவசமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு மற்றும் உங்கள் வாகனம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க, அருகிலுள்ள ஹோண்டா சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.