ரணிலுக்கு வீட்டு உணவு

ரணிலுக்கு வீட்டு உணவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நலத்தை கருத்திற்கொண்டு வீட்டிலிருந்து உணவு பெறுவதற்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் ஆணையருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விக்ரமசிங்கவுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதை கருத்திற்கொண்டு  மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This