கொழும்பு பங்குச் சந்தையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம்
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் (ASPI) இன்று 197.19 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
அதன்படி,இன்றைய நாள் வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடும் 17,025.99 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் அனைத்துப் பங்கு விலைக் குறியீடும் 17,000 புள்ளிகளை எட்டிய முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியுள்ளது.
இன்று பதிவான வருவாய் ரூ. 9.78 பில்லியனாகும்.