பங்களாதேஷில் ஒடுக்கப்படும் இந்துக்கள்: இலங்கையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பங்களாதேஷில் ஒடுக்கப்படும் இந்துக்கள்: இலங்கையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

உலக இந்து அமைப்புகள் சங்கத்தின் இலங்கை கிளை சார்பில் பங்களாதேஷில் ஒடுக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு 7, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் இலங்கை அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பங்களாதேஷில் ஒடுக்கப்படும் இந்து மக்களின் துயர நிலையை வெளிக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சர்வதேச தலையீடு அவசியம் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பங்களாதேஷ் இந்து சமுதாயத்தின் பாதுகாப்பு, சமத்துவம், மற்றும் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென கோரிய கோரிக்கை கடிதமொன்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்.

Share This