பாலைவன மணலைப் பயன்படுத்தி உயர்தர சாலைகள் – ஜப்பான் கண்டுபிடிப்பு

பாலைவன மணலைப் பயன்படுத்தி உயர்தர சாலைகள் – ஜப்பான் கண்டுபிடிப்பு

கட்டுமானத் துறையில் நீண்டகாலமாக இருந்துவரும் ஒரு மிகப்பெரிய சவாலுக்கு ஜப்பானின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா ஒரு புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளது.

பாலைவன மணலைப் பயன்படுத்தி உயர்தர சாலைகளை அமைக்கும் ‘ரைசிங் சாண்ட்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் கட்டுமானப் பணிகளுக்காக ஆற்று மணல் மற்றும் பாறைகளை உடைத்து எடுக்கப்படும் மணல் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பூமியில் அதிகளவில் கிடைக்கும் பாலைவன மணல் கட்டுமானத்திற்குப் பயன்படுவதில்லை.

இதற்கு முக்கியக் காரணம், அதன் துகள்கள் மிகவும் நுணுக்கமாகவும், உருண்டையாகவும் இருப்பதே ஆகும். இதனால் அவை சிமெண்டுடன் வலுவாக ஒட்டாமல், கட்டுமானத்தின் உறுதியைக் குறைக்கின்றன.

இந்தநிலையில் ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான பாத்ஏஹெட், இந்த நுண் மணல் துகள்களை ஒருங்கிணைத்து வலுவான ‘செயற்கை துகள்களாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )