ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

‘அரகலய’ போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை கலைக்க அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்திய ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தினார்.
இவ்வாறு அவரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர கால சட்டம் அடிப்படை உரிமைகளை மீறுயதாக உயர் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்துள்ளது