
உடதும்பர பகுதியில் அதிக மழைவீழ்ச்சி – பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு
கண்டி மாவட்டத்தின் உடதும்பர பகுதியில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், நிலையற்ற தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகளைக் காட்டும் பகுதிகளைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பொது மக்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொலுவ, உடதும்பர, மெததும்பர, மினிபே, மதுரட்ட, நில்தண்டஹின்ன, ஹங்குரன்கெத்த மற்றும் வலப்பனே உள்ளிட்ட கண்டி மற்றும் நுவரெலியா முழுவதும் உள்ள எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 3 ‘சிவப்பு’ நிலச்சரிவு வெளியேற்ற எச்சரிக்கைகள் நடைமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு அபாயம் அதிகமாக இருப்பதால், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், விரிசல்களைக் காட்டும் வீடுகள் அல்லது கட்டிடங்களைத் தவிர்க்கவும் குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
