
மான்செஸ்டரில் கடும் மழை – பல விமானங்கள் தாமதம்
மான்செஸ்டரில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக பயணிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கிரேட்டர் மான்செஸ்டரில் இன்று திங்கட்கிழமைபெய்த கனமழையால் மான்செஸ்டர் விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டரில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக, கோபன்ஹேகன், பாரிஸ் மற்றும் மலகா உள்ளிட்ட ஐரோப்பா முழுவதும் பயணிக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், ரியானேர், ஈஸிஜெட் உள்ளிட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.
எவ்வாறாயினும், இன்று இரவு 11.59 மணி வரை மழைக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மற்றும் மோசமான தெரிவுநிலை காரணமாக பயணங்களில் தாமதம் ஏற்பட்டதாக மான்செஸ்டர் விமான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
CATEGORIES உலகம்
