வரவு செலவுத் திட்டத்துக்கு சுகாதார சேவை அதிகாரிகள் எதிர்ப்பு

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார நிபுணர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இன்று முதல் கருப்பு பட்டி அணிந்து பணிக்கு வருகைத் தர அனைத்து சுகாதார நிபுணர் சங்கங்களும் தீர்மானித்துள்ளன.
சுகாதார சேவை பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், அடுத்த வாரம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அரசு மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.
“சுகாதார சேவை அதிகாரிகள் ஒரு நாளைக்கு 24 மணிநேரமும், வருடத்தில் 365 நாட்களும் வேலை செய்யும் மக்களின் குழுவாகும்.” விடுமுறை நாட்களிலோ அல்லது இரவிலோ வேலையைத் தவிர்க்க முடியாது. வரவு செலவு திட்டங்களை புறக்கணிப்பது இங்குள்ள சுகாதார நிபுணர்களை பின்தங்க வைக்கும்.” எனவும் சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றன.