சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் நியாயமற்றது

சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் நியாயமற்றது

நியாயமான அடிப்படை சம்பள உயர்வு வழங்கப்பட்ட போதிலும் சுகாதார நிபுணர்கள் சங்கத்தால் இன்று (18) வைத்தியசாலைகளில் நடத்தப்படும் வேலை நிறுத்தம் நியாயமற்றது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (18) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நோயாளிகளின் உயிரைப் பணயமாக வைத்துக்கொண்டு நடத்தப்படும் இந்தப் போராட்டம் நியாயமற்றது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், இந்த நியாயமற்ற வேலை நிறுத்தத்தில் இணையாமல் தங்கள் கடமைகளைச் செய்யும் அனைத்து சுகாதார நிபுணர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தனது தொழில் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எந்த நேரத்திலும் நேரத்தை வழங்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதற்கு எதிராக, அரசாங்க துணை மருத்துவ நிபுணர்கள் சங்கம் இன்று (18) காலை 7.00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This