கூடுதல் நேர கொடுப்பனவுக்காக 3823 கோடி செலவழித்த சுகாதார அமைச்சு

கூடுதல் நேர கொடுப்பனவுக்காக 3823 கோடி செலவழித்த சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சு 2023ஆம் ஆண்டில் திறைசேரி செயலாளரின் சுற்றிக்கைக்கு மாறாக, கூடுதல் நேர மற்றும் கட்டாய தினசரி ஊதியத்திற்காக 3823 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவழித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

கூடுதல் நேரம் மற்றும் விடுமுறை நாட்களுக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை சம்பள பட்ஜெட்டில் 72 வீதம் என்றும் அறிக்கை கூறுகிறது.

வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்காக மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவழித்து சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்ட 213 கைரேகை இயந்திரங்கள் செயலிழந்து காணப்படுவதாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல் சுகாதார அமைச்சகம் தொடர்பாக வெளியிடப்பட்ட சமீபத்திய தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This