தொலைபேசிகளுக்கான டேட்டா பொதிகளின் விலை அதிகரிப்பா?
கையடக்க தொலைபேசிகளுக்கான டேட்டா பொதிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் இந்திரஜித் ஹடபங்கொட இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொலைபேசி பொதியின் விலையையும் அதிகரிக்க எந்தவொரு நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் தான் செயல்படுத்திய தொலைபேசி பொதியின் விலையில் அதிகரிப்பை எதிர்கொண்டால், அது தொடர்பான ஆதாரங்களை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.