ஹட்டன் தனியார் பேரூந்து விபத்து – சாரதிக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

ஹட்டன் தனியார் பேரூந்து விபத்து – சாரதிக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

ஹட்டன் தனியார் பேருந்து விபத்தின் சாரதியை கடுமையான பிணை நிபந்தனைகளில் விடுவிக்குமாறும், இந்த வழக்கை எதிர்வரும் 05.06.2025 அன்று மீண்டும் விவாதத்துக்கு எடுக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான எம்.பரூக்தீன் இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.

நாவலப்பிட்டி நவதிஸ்பனையைச் சேர்ந்த ரம்போடகெதர பிரசன்ன பண்டார (வயது 46) என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய சாரதியின், சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன், பேருந்தின் உரிமையாளரை (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பிரதான சந்தேகநபரான சாரதி, 10 இலட்ச ரூபாய் கொண்ட இரு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து மல்லியப்பூ பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் சனிக்கிழமை (21) பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், மூன்று பேர் உயிரிழந்திருந்ததுடன், 30 பேர் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share This