மேக்னஸ் கார்ல்ஸனை மீண்டும் தோற்கடித்து குகேஷ் அசத்தல்

மேக்னஸ் கார்ல்ஸனை மீண்டும் தோற்கடித்து குகேஷ் அசத்தல்

சதுரங்கப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்ஸனை தமிழ்நாட்டு வீரரும் நடப்பு உலக சாம்பியனுமான குகேஷ் மீண்டும் தோற்கடித்து அசத்தியுள்ளார்.

குரோஷியாவில் உள்ள ஜாக்ரெப் நகரில் நடைபெற்று வரும் ரேபிட் செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டு வீரர்களான பிரக்னானந்தா, குகேஷ் விளையாடி வருகின்றனர்.

இப்போட்டியில் சிறப்பாக ஆடி வரும் குகேஷ், நான்காவது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெர்க்கையும், ஐந்தாவது சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டன் ஃபேபியானோ கருவானைவை வீழ்த்தி டிரெய்லரை களமிறக்கியிருந்தார் குகேஷ்.

இப்பின்னணியில் உலகின் முதல்நிலை வீரரும், ரேபிட் செஸ்ஸில் கரை கண்டவருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை குகேஷ் எதிர்கொண்டார்.

சமீபத்தில் நார்வேயில் நடந்த போட்டியில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தியிருந்த நிலையில் இப்போட்டியில் கருப்புக் காய்களுடன் குகேஷ் ஆடியது பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஆனால் வியூப்பூட்டும் வகையில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தினார். போட்டியில் தற்போது முதலிடத்தில் உள்ளார் குகேஷ்.

போட்டியை வர்ணனை செய்த 13 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கேரி காஸ்பரோவ், இம்முறை குகேஷ் வென்றது அதிர்ஷ்டம், கார்ல்சனின் தவறு என்றெல்லாம் சொல்ல முடியாது. இது ஆணித்தரமான வெற்றி என அடித்துக் கூறியிருக்கிறார்.

போட்டிக்கு முன்னர் பேட்டியளித்த கார்ல்சன், குகேஷுக்கு ரேபிட் செஸ்ஸெல்லாம் சரிப்பட்டு வராது எனக் கூறியிருந்தார். OVER CONFIDENCE ஒடம்புக்கு ஆகாது என்பது உலகின் நம்பர் 1 வீரர்களுக்கும் பொருந்தும்.

Share This