இந்திய வெளியுறவுச் செயலாளரை சந்தித்த இலங்கை இளம் அரசியல்வாதிகள் குழு

இந்திய வெளியுறவுச் செயலாளரை சந்தித்த இலங்கை இளம் அரசியல்வாதிகள் குழு

இலங்கையில் உள்ள 14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 இளம் அரசியல்வாதிகள் குழு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியைச் சந்தித்துள்ளது.

இரண்டு வார நிகழ்ச்சிக்காக இந்தக் குழு இந்தியாவிற்கு சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்திய-பாகிஸ்தான் நெருக்கடியின் தாக்கம் மற்றும் புதிய பிராந்திய கூட்டாண்மையை உருவாக்குவதில் இந்தியா எவ்வாறு வழிநடத்த முடியும் என்பது குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும் குழு பாராட்டியது.

இதற்கிடையில், எதிர்கால பங்காளிகளாக இந்திய-இலங்கை கூட்டாண்மையில் தங்களுக்கு மதிப்புமிக்க பங்கு உண்டு என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Share This