மகா கூட்டணி மலரும்: ஐ.தே.க ஆண்டு விழாவில் மனோ

” ஜனநாயக ரீதியில் மகா கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு முற்படுகின்றோம். அதனை நாம் செய்வோம். இது கள்வர்களின் கூட்டணி அல்ல. ”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“எதிரணிகள் ஒன்றிணைவதற்கு முற்படும்போது கள்வர்கள் ஒன்றிணைகின்றனர் என ஆளுந்தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இதனை முற்றாக நிராகரிக்கின்றோம். இங்கு களவு, மோசடிகளுக்கு இடமில்லை. எனவே, அனைவரும் கள்வர்கள் எனக் கூறுவதை ஆளுங்கட்சி நிறுத்த வேண்டும்.
கள்வர்களை பிடிக்க வேண்டும், அவர்களுக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கை வேண்டும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. இது தொடர்பான நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாகவே இடம்பெறவேண்டும். கள்வர்கள் யாரென்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.” – எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.