மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் GovPay அறிமுகம்

மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் GovPay அறிமுகம்

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கட்டண நடவடிக்கைகளை இன்று (26) முதல் GovPay மூலம் மேற்கொள்ள முடியும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வாடிக்கையாளர்கள் இன்று முதல் GovPay மூலம் எந்தவொரு கட்டண பரிவர்த்தனையையும் மேற்கொள்ள முடியும் என அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வாடிக்கையாளர்கள் இந்த கட்டண முறை மூலம் திறமையான மற்றும் வெளிப்படையான சேவைகளைப் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் டிஜிட்டல் ஆளுகைக் கொள்கைக்கு இணங்க, பல அரச நிறுவனங்கள் தற்போது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் கடமைகளைச் செய்து வரும் நிலையில், அதன்படி, அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு படியாக ‘GovPay’ கட்டண வசதி இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது, ​​137 அரச நிறுவனங்கள் GovPay மூலம் இணைக்கப்பட்டுள்ளதுடன், 138வது அரச நிறுவனமாக மத்திய மத்திய சுற்றாடல் அதிகாரசபை, இன்று (26) முதல் GovPay மூலம் எந்தவொரு கட்டண பரிவர்த்தனையையும் வாடிக்கையாளர்களால் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கியுள்ளது.

Share This