இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கு கிடைத்த கௌரவம்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கு கிடைத்த கௌரவம்

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, குளோபல் ஃபைனான்ஸின் 2025ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டைகளில் (Global Finance’s Central Banker Report Cards 2025) உயரிய ‘ஏ’ தர மதிப்பீட்டை பெற்றுள்ளார்.

இதன் மூலம் உலகின் மரியாதைக்குரிய மத்திய வங்கி ஆளுநர்களின் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார்.

கடுமையான பொருளாதார பிரச்சினையை நாடு சந்தித்தபோது நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் அவரது பங்களிப்பு மற்றும் மூலோபாய அறிவு ஆகியவை இந்த மதிப்பீட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது.

Share This