
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசாங்கம் தயார்
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதென அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அதற்கு எதிர்க்கட்சி தயாராக இல்லாவிடில், கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியது எதிர்க்கட்சியே தவிர ஆளும் கட்சி அல்ல என்றும் கூறினார்.
அரசாங்கம் கூறுவதற்கமைய அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள எதிர்க்கட்சி தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
