கோட்டை ரயில் நிலையத்துக்கு புதுப்பொலிவு கொடுக்க தயாராகும் அரசாங்கம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின்(ADB) நிதியுதவியுடன் ரூ.1.3 பில்லியன் செலவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க அரசாங்கம் திட்டத்தை தயாரித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாகவும், 15 மாதங்களுக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் கோட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய நவீன போக்குவரத்து மையமாக மாற்றும். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.