
அடுத்த வாரம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு
நாட்டின் போதைப்பொருள் நெருக்கடியை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, மார்ச் முதலாம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் முன்னெடுக்கப்பட்ட முழு நாடும் ஒன்றாக திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் அனைத்து நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைப்புகள் அடுத்த வாரம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறு பொது நிர்வாக அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உத்தியோகப்பூர்வ வழிகாட்டுதல்களின்படி, நாட்டின் இளைஞர்களைப் பாதுகாப்பதற்கான சமூக விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் பிராந்திய நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருள் இல்லாத எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களையும் அணிதிரட்டுவதே இந்த திட்டத்தின் நோக்கமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
