குரங்குகளைக் கணக்கெடுக்க அரசாங்கம் தீர்மானம்

குரங்குகளைக் கணக்கெடுக்க அரசாங்கம் தீர்மானம்

குரங்குகள் தென்னை பயிர்ச்செய்கைகளை அழிப்பதைத் தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முதல் முறையாக குரங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி அல்லது 22 ஆம் திகதிகளில் குரங்குகள் தொகை கணக்கெடுப்பு நடத்தவுள்ளதாகத் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்தார்.

குரங்குகளின் தலையீடு காரணமாக 2024 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான தேங்காய்கள் அழிக்கப்பட்டதாகவும், இது நாட்டின் பொருளாதாரத்தைக் கணிசமாகப் பாதித்ததாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதனால் குரங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழில்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, விவசாய அமைச்சு, மற்றும் காவல் துறை உட்பட பல அரச நிறுவனங்கள் குரங்குகளின் கணக்கெடுப்பிற்காக ஒத்துழைப்பு வழங்கவுள்ளன.

Share This