மலையக மக்களுக்கு வீட்டு முகவரிகள் – வழங்கும் பணியை ஆரம்பித்தது அரசாங்கம்

பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு வீட்டு முகவரியை பெற்றுக்கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட முகவரியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திட்டத்தின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை 260,000 இற்கும் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெருந்தோட்ட மக்களுக்கு தமது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக முகவரிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலத்தில் தெரிவித்திருந்தார்.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் அதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பின்புலத்திலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.