உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதுவும் தெரியாது – கோட்டாபய ராஜபக்ச
![உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதுவும் தெரியாது – கோட்டாபய ராஜபக்ச உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதுவும் தெரியாது – கோட்டாபய ராஜபக்ச](https://oruvan.com/wp-content/uploads/2025/02/FB_IMG_1675859532468.jpg)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது அசாத் மவுலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ச, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.
“தயவுசெய்து, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை படியுங்கள், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வழங்கியுள்ள சாட்சியங்கள் உட்பட.. குறித்த அறிக்கையில் உள்ளதைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது” என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
டெய்லி மிரர் நாளிதழுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிள்ளையானின், முன்னாள் இணைப்புச் செயலாளர் அசாத் மவுலானா வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் முக்கிய சாட்சியான அசாத் மவுலானா வெகு விரைவில் சுவிட்சர்லாந்திலிருந்து அழைத்து வரப்படவுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலே, பிள்ளையான் இணைந்து செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.