சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சமூக நலத்திட்டம் மற்றும் ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே, எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் 100 சுற்றுலா தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  அந்த இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒவ்வொன்றிற்கும் ரூ.10 மில்லியன் ஒதுக்கப்படும்.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்காக ஓய்வு மையங்களை கட்டவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் வகுத்து செயல்படுவதால் இத்துறையில் உள்ளவர்களுக்கு எதிர்காலத்தில் பாரிய நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் பதில் அளித்தார்.

Share This