இணையத்தில் வைரலாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்பட பாடல்

இணையத்தில் வைரலாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்பட பாடல்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் , அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும்  ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்த பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.  தற்போது, அந்த எதிர்பார்ப்பை தாண்டி, இந்த பாடல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில் இந்த பாடலை, ஜி.வி. பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பாடியுள்ளனர்.

பாடலின் வரிகளை விஷ்ணு எடாவன் எழுதியுள்ளார்.

 

Share This