ஏப்ரல் 10 ஆம் திகதி ரிலீஸாகும் குட் பேட் அக்லி திரைப்படம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கும் அவரது 63 ஆவது திரைப்படம் குட் பேட் அக்லி.
இத் திரைப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இத் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அஜித்தின் இன்னொரு திரைப்படமான விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸாவதால் இத் திரைப்படம் தள்ளிப் போனது.
இந்நிலையில், இப் படம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.