இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு – விற்பனையில் சரிவு

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு – விற்பனையில் சரிவு

தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தங்கள் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 24 காரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை 268,000 ரூபாவாகவும், 22 காரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை 248,000 ரூபாகாவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தங்கள் வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகைக்கடைகளின் வருமானம் குறைந்துள்ளதாகவும், சில உள்ளூர் முதலீட்டாளர்கள் தங்க பிஸ்கட்டுகளில் முதலீடு செய்துள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும் தொழிலதிபர்கள் கூறுகின்றனர்.

மேலும், அடுத்த மாதம் முதல் திருமணம் செய்து கொள்ள சுப முகூர்த்தங்கள் இருந்தாலும், திருமண விழாக்களுக்கு தங்க நகைகள் வாங்குவது கணிசமாகக் குறைந்துள்ளதாக தொழிலதிபர்கள் தெரிவித்தனர்.

Share This