தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது! வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் விலையும் அதிகரிப்பு

தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது! வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் விலையும் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4,900 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.

தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,955.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது இதுவரை பதிவான அதிகூடிய தங்க விலையாகக் கருதப்படுகிறது.

தற்போதைய புவிசார் அரசியல் அமைதியின்மை மற்றும் அமெரிக்க டொலரின் பலவீனம் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலைக்கு ஏற்ப, வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 96.58 டொலர்களாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பிளாட்டினத்தின் விலையும் அதிகரித்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் எதிர்காலத்தில் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பும்,டொலரின் மதிப்பு 0.4 சதவீதம் குறையும் என்ற எதிர்பார்ப்பும் இதற்குக் முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னணி முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs), இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 5,400 அமெரிக்க டொலர் வரை உயரக்கூடும் என்று கணித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )