
தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை குறைவு
தமிழகத்தில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.
இதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 14,960 ரூபாவாக காணப்படுகிறது.
அத்துடன் வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு 12,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
அதனால் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் மதிப்பு,
தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இந்தியா
