வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை 4,800 டொலர்களை கடந்தது

வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை 4,800 டொலர்களை கடந்தது

உலக சந்தைகளில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 4,800 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கம் 4,858 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப நாட்டிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தரவுகளுக்கமைய, 22 கரட் தங்க பவுணொன்றின் விலையில்
10,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, 22 கரட் தங்க பவுணொன்றின் இன்றைய விலை 351,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், நேற்றைய தினம்370,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்கத்தின் விலை இன்றைய தினம்
380,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )