காற்று மாசுபாட்டால் உலகளாவிய ரீதியில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
![காற்று மாசுபாட்டால் உலகளாவிய ரீதியில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காற்று மாசுபாட்டால் உலகளாவிய ரீதியில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு](https://oruvan.com/wp-content/uploads/2025/02/polution001.jpg)
காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் பல்வேறு நோய்களால் உலகளாவிய ரீதியில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவாச நோய் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாச நோய்களால் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் விசேட வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, காற்று மாசுபாடு முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால், அது பொருளாதார ரீதியாகவும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று வைத்தியர் சுட்டிக்காட்டினார்.