ஜெனிவா கூட்டத்தொடர் செப்டம்பரில் ஆரம்பம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 03 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
ஒக்டோபர் 03 ஆம் திகதிவரை இம்மாநாட்டில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்று வரவுள்ளது. அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மீளாய்வு அறிக்கையும் முன்வைக்கப்படவுள்ளது.
எனவே, இலங்கை அரசின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழுவொன்று பங்கேற்கவுள்ளது என தெரியவருகின்றது.
அதேபோல ஜெனிவா தொடருக்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவுள்ளது எனவும், நிகழ்நிலை சட்டம்கூட மீளாய்வுக்குட்படுத்தப்படவுள்ளதெனவும் அறியமுடிகின்றது.