ஜெனிவா மனித உரிமைச் சபை கூடவுள்ள நிலையில் தமிழர் தரப்பின் சந்திப்புகள்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக மெரரீசியஸ் வெளிவிகார அமைச்சர் தனஜே ராம்ஃபுல் உள்ளிட்ட மொரீசியஸ் வெளிவிவாகர அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலரை பிரித்தானிய தமிழர் பேரவை சந்தித்து உரையாடியுள்ளது.
ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் பற்றிய பொறுப்புக் கூறல் விடயங்களில் இலங்கை அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுவதாகவும், ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை முன்வைக்க இதுவரை ஏற்பாடுகள் எதுவும் இல்லை எனவும் பிரித்தானிய பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
ஜெனீவா மனித உரிமைச் சபையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அக் கூட்டத் தொடரில் ஈழத்தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து எடுத்து விளக்க வேண்டுமென பிரிதானிய பேரவை கோரியுள்ளது.
இலங்கை தொடர்பான தீர்மானங்களை கருக்குழு நாடுகள் முன்வைக்கும்போது, ஈழத்தமிழர் பற்றிய விடயங்களில் குறிப்பாக இன அழிப்பு தொடர்பான விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடி வருகின்றனர்.
தமிழ்த்தேசிய போரவை, பொதுவேட்பாளராக போட்டியிட்ட பா.அரியநேந்திரன், மற்றும் சில அமைப்புகள் ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.
ஏதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடையவுள்ளது. எனவே புதிய தீர்மானம் ஒன்றை மனித உரிமைச் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், அத் தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என ஆணையாளர் வலியுறுத்த வேண்டும் என்று தமிழர்தரப்பு கோரி வருகிறது.
சில அமைப்புகள் இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.