காசா காவல்துறைத் தலைவர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி

காசா காவல்துறைத் தலைவர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி

காசா காவல்துறை இயக்குநர் ஜெனரல் மஹ்மூத் சலா இஸ்ரேலால் கொல்லப்பட்டார். தெற்கு காசாவில் இஸ்ரேலால் ‘பாதுகாப்பான பகுதி’ என அறிவிக்கப்பட்ட அல்-மவாசி அகதிகள் கூடாரங்கள் மீது போர் விமானம் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

நேற்று இரவு நடந்த தாக்குதலில் மஹ்மூத் சலா உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பொலிஸ் மா அதிபரின் உதவியாளர் ஹுஸாம் முஸ்தபா ஷவானும் கொல்லப்பட்டதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதே நேரத்தில், ஜபாலியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் புதன்கிழமை நடந்த தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வடக்கு காசா கடுமையான முற்றுகைக்கு உட்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வடக்கு காசாவில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு தடுப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கனமழை மற்றும் பலத்த காற்று காசாவில் உள்ள முகாம்களைத் தாக்கியுள்ளதுடன் பொது மக்களின் வாழ்க்கையை மேலும் கடினமாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

காசாவின், தக்ஷினா கான் யூனுஸ், டீர் உல் பலாஹ் ஆகிய இடங்களில் மழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்ததால் 1,500 க்கும் மேற்பட்ட குடிசைகள் பொது மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாகியுள்ளதாக சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

Share This