கணேமுல்ல சஞ்சீவ கொலை – சோதனைக்குட்படுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் கைப்பேசி

கணேமுல்ல சஞ்சீவ கொலை – சோதனைக்குட்படுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் கைப்பேசி

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் தற்போது பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் கையடக்கத் தொலைபேசியில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் படங்கள் நீக்கப்பட்டிருந்த போதும், பொலிஸ் விசாரணை அதிகாரிகள் அவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபரின் தொலைபேசியிலிருந்து விசாரணை அதிகாரிகள் மற்றுமொரு துப்பாக்கியின் புகைப்படங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிளின் கைப்பேசியை சோதனை செய்தபோது, ​​தற்போது தலைமறைவாகியுள்ள பெண் சந்தேகநபருக்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்ட தொலைபேசி எண்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மேலும் சோதனையிட்ட போது கைப்பேசியில் இருந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டிருந்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவைச் சுட துப்பாக்கிதாரி பயன்படுத்திய ரிவொல்வர் துப்பாக்கியின் புகைப்படங்களும், மற்றுமொரு கைத்துப்பாக்கியின் புகைப்படங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், காணாமல் போன சந்தேக நபரான பெண் சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு புகைப்படங்களை அனுப்பியது தெரியவந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபரான பெண் தொடர்பில் மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் போது, ​​குறித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த நீர்கொழும்பு பொலிஸில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள், தொடர்பான தகவல்கள் கிடைத்ததையடுத்து, கொழும்பு குற்றப்பிரிவின் சிறப்பு பொலிஸ் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது தலைமறைவாகியுள்ள பெண் சந்தேகநபரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் மேற்பார்வையின் கீழ் கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 19 ஆம் திகதி, கொழும்பு புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, சட்டத்தரணி வேடமணிந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Share This